YEN - இறைவன் என்றொரு கவிஞன்

YEN - இறைவன் என்றொரு கவிஞன்

Postby balankamala » Thu Jan 09, 2014 5:52 pm


படம்: ஏன்(1970)
வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஆர்.பாப்பா

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியைப் போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர் கதை உண்டு
முடிக்கவேண்டு மென்று முடிப்பதும் உண்டு
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்திலிருந்தே கவிதையை முடித்தான்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

DR.K.K.SUBRAMANIAN.[b][b]
balankamala
Cool Member
 
Posts: 51
Joined: Thu May 10, 2012 10:42 am
Location: india

Return to "y"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search