Nallavan Vazhvan

Nallavan Vazhvan

Postby venougopal » Tue Oct 03, 2017 8:37 pm

திரைப்படம் : நல்லவன் வாழ்வான் (1961)
பாடல் : ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பாடலாசிரியர் : எம்.கே.ஆத்மநாதன்
இசை : டி.ஆர்.பாப்பா

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே உயர்
சமரச நெறிகளிலே ஆ....ஆஆ....ஆஆஆ....
சத்தியத்தின் எல்லையிலே உயர்
சமரச நெறிகளிலே அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 871
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Return to "N"

Who is online

Users browsing this forum: Bing [Bot] and 1 guest

  • Advertisement
Custom Search