Missiammaa

Missiammaa

Postby divya » Tue May 29, 2007 1:27 pm

Singer: A.M Raja
Song: Mudiyum Endraal

mudiyum endraal padiyaadhu
padiyum endraal mudiyaadhu
mudiyum endraal padiyaadhu
padiyum endraal mudiyaadhu
vanjiyarin varthaiyile arthame veru thaan
arthamellaam veru thaan
agaraadhiyum veru thaan

alukki kulukki odhungi nindraal
alukki kulukki odhungi nindraal
arugil odi vaarumenre
valiyap pesi vaarumendraal
valiyap pesi vaarumendraal
vandha vazhiyai paarumenre
vanjiyarin varthaiyile arthame veru thaan
arthamellaam veru thaan
agaraadhiyum veru thaan

viraippum muraippum iruppadhellaam
viraippum muraippum iruppadhellaam
vishayam adhile irukkumenre
sirithu sirithu pesinaalum
sarasam iniyum podhumendre
vanjiyarin varthaiyile arthame veru thaan
arthamellaam veru thaan
agaraadhiyum veru thaan

mudiyum endraal padiyaadhu
padiyum endraal mudiyaadhu
mudiyum endraal padiyaadhu
padiyum endraal mudiyaadhu
vanjiyarin varthaiyile arthame veru thaan
arthamellaam veru thaan
agaraadhiyum veru thaan
User avatar
divya
Valued Contributor
 
Posts: 423
Joined: Wed Oct 11, 2006 6:30 pm

Missiammaa

Postby revathi_malar » Sat Aug 11, 2007 3:31 am

படம்: மிஸ்ஸியம்மா (மிஸ் மேரி என்று இந்தியில் வந்தது)
வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: A.M.ராஜா, P.சுசீலா
இசை: S.ராஜேஸ்வர ராவ்

பிருந்தா வனமும் நந்த குமாரனும்
யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ
(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)

புல்லாங் குழலின் இனிமை யினாலே
உள்ளமே ஜில் லெனெத் துள்ளாதா
ராகத்திலே அனு ராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா
(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ
(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)
User avatar
revathi_malar
Valued Contributor
 
Posts: 346
Joined: Sat Jan 13, 2007 3:33 am

Re: Missiammaa

Postby balankamala » Sat Jan 07, 2017 9:41 pm

படம்: மிஸ்ஸியம்மா.(1955)
இசை: ராஜேஸ்வர ராவ்.
பாடியவர் - பி. லீலா.
பாடல் - டி.ராமையா தாஸ்.

என்னை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என் துணை நீயே மேரி மாதா
என்னை ஆளும் மேரி மாதா
என் துணை நீயே மேரி மாதா

பரிசுத்த ஆவியாலே
வர புத்ரன் ஈன்ற தாயே
பரிசுத்த ஆவியாலே
வர புத்ரன் ஈன்ற தாயே
பிரபு யேசுநாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார்
என்னை ஆளும் மேரி மாதா
என் துணை நீயே மேரி மாதா

நெறி மாறி வந்ததால் நகைப்பானதே
என் வாழ்வே நெறி மாறி வந்ததால்
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இலையே
அனு தினமும் சோதியாதே

என்னை ஆளும் மேரி மாதா
என் துணை நீயே மேரி மாதா

DR.K.K.SUBRAMANIAN.
balankamala
Cool Member
 
Posts: 51
Joined: Thu May 10, 2012 10:42 am
Location: india

Re: Missiammaa

Postby venougopal » Tue Oct 03, 2017 9:56 pm

திரைப்படம் : மிஸ்ஸியம்மா (1955)
பாடல் : பழகத் தெரிய வேணும்
பாடியவர் : ஏ.எம். ராஜா
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
இசை : எஸ்.ராஜேஸ்வர ராவ்

ஆ... ஆ......... ஆ....... ஆ....... ஆ.......
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்

பழங்காலத்தின் நிலை மறந்து ஆ..
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து

பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்

பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கே கூடாது ஆ..
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கே கூடாது
பேதமில்லா இதயத்தோடு
பேதமில்லா இதயத்தோடு
பெருமையோடு பொறுமையாக

பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்

கடுகடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ
கடுகடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ
கன்னியர்கள் ஆடவரைப்
புன்னகையால் வென்றிடவே

பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 871
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry


Return to "M"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search